ஆட்டோக்களை தூக்கி சென்ற போலீஸ்

Spread the love

ஹட்டன் நகர மத்தி மற்றும் நகரின் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓட்டோக்களை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஓட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், நகருக்கு ஏனைய வாகனங்களில் வருகைத் தருபவர்கள்

மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் பல சிரமங்களுக்கு முகம்​கொடுப்பதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, நகர சபையிடம் அனுமதி பெற்ற ஓட்டோக்களை மாத்திரம்

நகரில் நிறுத்தி வைக்க ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுமதிபெறாத ஓட்டோக்களை ஓட்டோ நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக செயற்படும் ஓட்டோ உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை
எடுக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    Leave a Reply