அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்

Spread the love

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்

ஈராக் தலைநகர் பக்தத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈரான் இராணுவ தளபதி மற்றும் ஈராக் நாட்டின் இராணுவ தளபதிகளை அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் மூலம் நான்கு ஏவுகணைகளை வீசி கொன்று குவித்தது .

இந்த அமெரிக்காவின் படுகொலையை அடுத்து தற்போது ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரக பகுதியில் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .

இதனால் அந்த தூதரகத்தின் கட்டிடங்கள் ,கார்கள் என்பன பலத்த சேத மடைந்துள்ளன .
இங்கு காயங்கள் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவரவில்லை .

இதேபோல Baghdad’s Jadriya பகுதியில் வீழ்ந்து வெடித்த மோட்டர் குண்டு தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் .

அமெரிக்கா ஆதரவு ஐரோப்பிய நாடுகள் ,அதவது அமெரிக்கா அதரவு நாடுகள் தமது மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படி அழைப்பு விடுத்துள்ளன .

அமெரிக்கா தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல் – வெடித்தது போர்

ஈரான் இராணுவ தளபதி உடல் நாளை அடக்கம் செய்ய படவுள்ள நிலையில் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் தீவிர தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

அதுபோல தொடர்ந்து ஈரானை வம்புக்கு இழுக்கும் தாக்குதல்களை அமெரிக்காவும் மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

தற்போது மத்திய கிழக்கு பகுதி பெரும் பதற்றமானதாக காண படுகிறது ,அதே போல ஈரான் கடல் அண்மித்த சர்வதேச கடல் கப்பல் போக்குவரத்துக்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

அத்துடன் அமெரிக்காவின் தலைநகரில் ஜிகாத் மூலம் பெரும் தக்குதலை ஈரான் வெளியக உளவுத்துறை தொடராக நடத்த கூடிய அபாயம் எழுந்துள்ளது .

இரத்த கறை படிந்த அமெரிக்கா இதற்குரிய விளைவுகளை சந்திக்கும் என ஈரான் நாட்டின் அதிபர் அறிவித்து குறிப்பிட சில மணித்தியாலங்களில் இந்த ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .எதிரி நாடுகளான ஈரான் ,ஈராக் இரண்டும் ஒன்று சேர்ந்து அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தாக்குதலை நடத்த

இந்த படுகொலை களம் அமைத்துள்ளது ,மூன்றாம் உலக யுத்தம் இதனோடு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது

அமெரிக்கா தூதரகம்
அமெரிக்கா தூதரகம்
அமெரிக்கா தூதரகம்

Leave a Reply