அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்
Spread the love

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம்

அமெரிக்காவை தாக்கிய புயல் 11பேர் மரணம் 60 பேர் காயம் என தெரிவிக்க பட்டுள்ளது .

உலக வல்லரசு அமெரிக்காவினை தாக்கி வரும் கடும் புயல் மற்றும் கன மழை காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி ஆகிய இடங்களில் சூறாவளியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

திடீர் சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளியால் ஐந்து மாநிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .இதே பகுதிகளில் 25 சூறாவளி தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் ,மக்கள் தாற்காலிக ,இடை தங்கள் நிலையங்களில் தங்க வைக்க பட்டுள்ளதாக அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன .

சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதம்

திடீர் சூறாவளியால் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சீராற்ற காலநிலை காரணமாக அமெரிக்காவாவில் இயல்பு நிலை பாதிக்க பட்டதுடன் ,கடும் சூறாவளி புயல் காரணமாக பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது .

வீடுகளின் கூரைகளை அடித்து சென்ற சூறாவளி

மக்களது வீடுகளின் கூரைகள் சூறாவளியில் அடித்து செல்ல பட்டுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த திடீர் சூறாவளி புயல் காரணமாக ,அமெரிக்காவின் ஐந்து மாநிலங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .

அவ்விதம் புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளின் மொத்த சொத்து இழப்பு தொடர்பான கணக்கறிக்கை தயாராகி வருகிறது .

இவ் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட அதி உச்ச சூறாவளி புயல் இதுவாக காணப்பட்டுள்ளது என்கின்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஜனாதிபதி ஜோ பைடன் அனுதாபம்

ஜனாதிபதி ஜோ பைடன் புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ,கோர புயலினால் பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார் .

ஜோ பைடன் சிக்கினார்

ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ,சீரற்ற காலநிலை புயலினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய முறையில் தீர்வை வழங்கினால் மட்டுமே ,அவரினால் மகத்தான வெற்றியை பெற முடியும் என்ற நிலை காண படுகிறது .

அதனால் புயலினால் ஏற்பட்ட மக்கள் இழப்பை, அரசு செலுத்த வேண்டிய நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .