அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி

Spread the love

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி

கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீப்பற்றி எரிந்து வருகிறது.
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளன.

காட்டுத்தீ காரணமாக 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

Leave a Reply