அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
Spread the love

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து தெரிவித்தார்.

அண்மையில் (05) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறந்த சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், நவம்பர்

மாதத்தில் ​​அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இதன்படி, திறந்த சந்தையில் ஜூலை மாதம் ஒரு கிலோகிராம் பருப்பு 595 ரூபாவாகவும், டிசம்பரில் லங்கா சதொச

நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் பருப்பு 389 ரூபாவாகக் குறைந்திருப்பதுடன், திறந்த சந்தையில் 410 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் 1ஆம் திகதியாகும் போது லங்கா சதொச நிறுவனத்தின் விலை 265 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், 280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை

225 ரூபாவில் இருந்து 198 ரூபாவாகவும் குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக சந்தைகளைக் கண்காணிக்குமாறும், சோதனைகளை நடத்துமாறும்

பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தர்.

அதற்கு மேலதிகமாக, நியாயமான சந்தை முறைமையை நிறுவும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாகவும் தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட முழுநேர உறுப்பினர்களின் தகுதிகளை இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு

எதிரான பாவனையாளர்களின் முறைப்பாடுளை விசாரிக்கும் முறையை வினைத்திறனாக்கும் பிரேரணைகள் இதில் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மற்றும் வலுவான முறையில். புதிய சரத்துக்கள் உள்ளிட்ட திருத்தச்சட்டமூலத்தை அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு இளைஞர்களை கூட்டுறவுத் துறைக்கு ஈர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இளம் தொழில்முயற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தும் வகையில் நிவாரணத் திட்டங்களை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர்

தெரிவித்தார்.கூட்டுறவுச் சங்கங்களின் வலுவூட்டல் மூலம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தைத் தற்பொழுது இலாபமீட்டும் நிறுவனமாக நடத்திச்செல்ல முடிந்திருப்பதாகவும், நாட்டுக்குத் தேவையான அமோனியம் நைட்ரஜனை இறக்குமதிசெய்து விநியோகிக்கும்

உரிமை எஸ்.ரி.சி நிறுவனத்திடம் காணப்படுகின்றபோதும், இந்தியாவில் அமோனியம் நைட்ரஜன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டமையால் நாட்டில் வெடிபொருட்களை நம்பியுள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன.

இருந்தபோதும் இந்நிறுவனத்தின் ஊடாக அமோனியம் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

தற்போது பிரதேச செயலக மட்டத்தில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், உரிய அடையாளப்படுத்தலின்

பின்னர் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிறை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வியாழேந்திரன்,
கௌரவ காதர் மஸ்தான், கௌரவ.

ரோஹன திஸாநாயக்கவும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் வர்த்தக, வாணிப மற்றும்உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

No posts found.