வெள்ளைவானில் கடத்த பட்ட பெண்ணிடம் – ஐந்து மணித்தியாலம் விசாரணை
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் நேற்று மாலை (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவருடன் சுவிஸ் தூதரக உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சட்டத்தரணிகளும் வருகை தந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம்
பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.