வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண் -நீதிமன்றில் நிறுத்தம்

Spread the love
வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண் -நீதிமன்றில் நிறுத்தம்

சுவிட்சலாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கையை

நீதிமன்றத்தில் இன்று (12) சமர்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரியிடம் இதுவரை 3 முறை வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்குமூலம் தொடர்பிலும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்

முன்னேற்றம் தொடர்பிலும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்த வகையில் மீண்டும்

கடத்தப்பட்டதாக கூறும் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply