கண்ணீரில்…. விலை மாது …!

Spread the love

கண்ணீரில்…. விலை மாது …!

தன்னம் தனி வந்தவரே
தயங்கி தயங்கி நிற்பவரே
கவலை விட்டு வாரும் – என்
கடமை செய்ய கூடும் ….

நேற்று பூத்த மல்லிகையே
நெய்தல் ஓரம் பூத்தவளே ..
நெஞ்சம் வைத்து சந்தம் பாட
நெருங்கி நெருங்கி வாரும் ..

அஞ்சுதல வீட்டெறிந்து
ஆகாயம் பாரும் …
கொஞ்சுதலில் தீர்ந்து
கொழுத்து பருத்து ஓடும் …

வயிற்று பசி போக்கிட தான்
வாழ்வை நானும் விக்கிறேன் …
வேலை யாரும் கொடுத்தா -ஏனோ
வேசியாகி சாகிறேன் ….?

எனக்குள் இருக்கும் ஆசை நூறு
என்ன பண்ண வாழ்க்கை பாரு …?
ஆண்டவனே நோக வைத்தான் – என்
ஆசைகளை ஈடு வைத்தேன் …

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -23/02/2019

Home » Welcome to ethiri .com » கண்ணீரில்…. விலை மாது …!

Leave a Reply