விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்

Spread the love

விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்

நடிகர் அருண் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லாத போதும், தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்.

விஜய், அருண் விஜய்

அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

Leave a Reply