வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்

Spread the love
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக

’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ்

நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை

அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் இப்படத்தில் ஏராளமான கெட்-அப்புகளில்

நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘அமர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

விக்ரம்

இந்நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள படக்குழு, இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு முடிவு

செய்யப்படவில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply