ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு
ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு அளிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் ஆட்சியின் கோட்டையாக விளங்கும் ,காபூல் பகுதியில் அமைக்க பெற்றுள்ள ,ரஷ்ய தூதரகத்தை சுற்றி ,ஆயுதம் தாங்கிய இராணுவம் ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .
இவர்களின் இந்த இராணுவ குவிப்பு ,பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு
ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல் , நடத்த படலாம் என்ற ,உளவு தகவலை அடுத்து ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தலிபான்கள் தலைநகர் ,காபூல் பகுதியில், நாள் தோறும் குண்டு வெடிப்புக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அதன் எதிரொலியாக ,இந்த பாதுகாப்பு ,இறுக்கமடைந்துள்ளது என்கிறது சுயாதீன தகவல்கள் .
ஓராண்டு கடந்து பயணிக்கும் தலிபான்கள் ஆட்சி ,செயல் இழக்கும் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதை ,இந்த தொடர் தாக்குதல்கள் எடுத்துரைக்கின்றன .