வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு

Spread the love

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்

அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி

பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply