ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

Spread the love

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,57 ழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ரசியா இராணுவம் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

இவ்வேளைஉக்கிரேனில் முக்கிய நகராகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்கி வரும் மரியபோல் பகுதியில் 1400 க்கு மேற்பட்ட உக்கிரேனிய இராணுவத்தினர் எதிரி இராணுவமான ரசியாவிடம் சரண் அடைந்துள்ளனர்

எதிரி படைகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது

இந்த சரணடைதலின் பொழுது எதிரிகள் பயன் படுத்திய கனரக டாங்கிகள் மற்றும் கவச வண்டிகளில் ,அதே எதிரிகளின் சீருடை அணிந்தவாறு ரஷியா இராணுவம்

முன்னேறிய வண்ணம் அந்த பகுதிகளில் உருமறைப்பு செய்தவாறு உலாவிய வண்ணம் வருகிறது

உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் அதே இராணுவத்தின் கவச வண்டிகள் அடங்கிகளில் வளம் வரும் ரசியாவினது இந்த சம்பவம் உக்கிரேன் இராணுவத்தின் உளவியல் உரனில் போராடும் செயல்திறனை செயல் இழக்க வைத்துள்ளது

கைது செய்யப் பட்ட எதிரி படைகள் உலக கைதிகள் பாதுகாப்பு சட்டதின் கீழ் ரசிய இராணுவதினால் நடத்துமா என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது .

அடி பணிய மறுக்கும் உக்கிரன் இராணுவம் என பறை சாற்றி வந்த உக்கிரேனிய அரச படைகளிற்கும் அதன் தளபதிகளுக்கும்

ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

இவ்விதம் பெரும் தொகையில் தஞ்சம் புகுந்துள்ள எதிர் தரப்பின் இராணுவ காவலர்கள் தஞ்சம் உலக ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உக்கிரேன் இராணுவத்தின் சரணாகதி நடவடிக்கையும்

இதனால் அந்த இராணுவத்திற்குள் எழப் போகும் உலவியில் கலக்கமும் தொடர்ந்து ரசிய படைகளுடன் போரிடும் தாக்கு திறனை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது

போல் உளவியல் தளத்தில் பாதிப்பை எந்த படைகள் ஏற்படுத்துகிறோதோ அவர்களே அந்த போரில் வெற்றி பெறுவார்கள் ,

இதற்க்காக இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஊடகங்களை பயன் படுத்தி வெற்றி பரப்புரைகளை ஆற்றி வரும்

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற போரில் சிங்ளக தரப்பு நடத்திய ஊடக ஆதார பரப்புரை ஒன்றை எடுத்து கூறலாம்

அதுபோலவே ரசியாவிடம் சரண் அடைந்த உக்கிரேன் இராணுவத்தை வைத்து ரசியா படைகள் பரப்புரை புரிந்து வருகின்றனர் ,

இந்த செயல் பாடு ரசியா எதிர் பார்க்கும் உளவியல் வெற்றியை ஈட்டி தருமா என்பதே காலத்தின் முன் விரிந்து கிடக்கும் களமுனை சாட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன

  • வணனி மைந்தன் –

    Leave a Reply