யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Spread the love

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட போதிலும் அவரின் சடலம் நேற்று (03) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அந்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை பரிட்சித்த வீட்டார் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டமையை அறிந்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்விக் கற்ற இந்த மாணவன் மன்னார் பள்ளிமுனையை சேர்ந்தவராவார்.

நியூமன் என்ற 26 வயதான மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    Leave a Reply