யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Spread the love

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

மானிப்பாயில் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது

    Leave a Reply