யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.
தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
- லண்டனுக்குள் பிள்ளையான் கருணா குழு
- ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
- செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken
- அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
- மகிந்தா நாய் கழுத்தில் 90 பவுன் நகை