யானை தாக்கி ஒருவர் மரணம்

Spread the love

யானை தாக்கி ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டுப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய

ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டுப்பகுதிக்கு சென்ற போது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது.

யானை தாக்கி ஒருவர் மரணம்

இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் காட்டு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியான மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply