மோகம் முப்பது -ஆசை அறுபது ..?
தங்க மேனி கண்டதுமே
தாழ்ந்து விழி போச்சுதடி …
அங்கமெலாம் மின்னல்வெட்டி
ஆளை மெல்ல கொன்றதடி ….
தங்க இடம் தந்தவளே
தாகம் மெல்ல ஊறுதடி ….
அங்கமெல்லாம் நாள் படர
அடியே பக்கம் வந்திடடி ….
கொஞ்சுதலில் கெஞ்சுதலில்
கொள்கை ஏதும் இல்லையடி …
வெள்ளை நிலா வந்து விட்டால்
வெளிச்சம் இங்கு வேண்டாமடி ….
மெல்ல உடல் வேர்த்திருக்க
மெல்லியதாய் மூச்சிழுக்க …
சோர்வு வந்து தாலாட்ட
சொர்க்கம் ஒன்று உறைந்து விடும் ….
அல்லும் பகல் ஊடல் அன்று
அழுத்து போன காலம் இன்று …
மஞ்சமது காத்திருந்தும்
மனதில் இல்ல விருப்பு இன்று ….
முதிர்ந்தவர்கள் சொன்னார் அன்று
முன்னே நானும் நம்பவில்லை ….
அனுபவ பள்ளியிலே – நிகழ்வு
அன்றாடம் பொயுமில்லை …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/06/2019