முற்றிலும் இலவசமான கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய சிகிச்சை

Spread the love
முற்றிலும் இலவசமான கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய சிகிச்சை

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத

வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.முஹம்மது ரஜீஸ் தலைமையில் இலவச வைத்திய விழிப்புணர்வும்,

கொரியன் முறை அக்யுபஞ்சர் வைத்திய சேவையும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில்

நேற்று (05)
இடம்பெற்றது.

இந்த வைத்திய விழிப்புணர்வு நிகழ்வையும், இலவச வைத்திய சிகிச்சையினையும் கல்முனை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்

கிழக்கு மாகாணத்தில் கொரியன் அக்யுபஞ்சர் வைத்திய முறையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற வைத்தியருமான எம்.வை.இஸ்ஹாகினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்,

நிந்தவூர் போன்ற பிரதேசத்திலிருந்து பலர் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply