மீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா

Spread the love
மீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் ’எண்ணித்துணிக’ படத்திலும் ஜெய்,

அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அதுல்யா, ஜெய்

மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ்

என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.

Leave a Reply