ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

Spread the love

ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை

அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

நடுவழியில் கார், பஸ் நின்று விட்டால் அதில் பயணிக்கிற பயணிகள் இறங்கி வந்து அவற்றை

தள்ளி விடுவதை நம்மில் பலரும் பார்த்து இருக்கிறோம். இதை பலரும் கிண்டலடிப்பது உண்டு.

ஆனால் ஒரு விமானம் இப்படி திடீரென நின்றுபோய் பயணிகள் தள்ளி விட்டு பார்த்திருக்கிறீர்களா?

இப்படி ஒரு வினோத காட்சி நேபாளத்தில் அரங்கேறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

அங்குள்ள பாஜூரா நகரத்தில் கோல்டி விமான நிலையத்தில் டாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்

விமானம் ஒன்று தரை இறங்கும்போது, ஓடுபாதையில் சென்றபோது திடீரென அதன் பின்புற டயர் வெடித்து நின்று விட்டது.

என்ன செய்வது என அறியாமல் விமானி திகைத்தார்.

இதற்கிடையே மற்றொரு விமானம் அங்கு வந்து தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் சூழல் உருவானது.

ஆனால் அங்கிருந்த பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த

விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது கேலி, கிண்டலுக்கு வழிவகுத்து விட்டது..

    Leave a Reply