மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

Spread the love
மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று எங்களிடம் வைத்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டோம் அந்த தீர்மானம் 100 வீதம் வெற்றி பெற்றிருக்கிறது அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மலையக மக்கள் என்ன தீர்மானத்தை எடுக்கின்றார்களோ அதற்கு சார்பாக நாங்கள் செயல்படுவோம் இதுவே மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தீர்மானமாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்பேதைய பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் கூட்டம் அட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில அரசியல் வாதிகள் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கருதுகின்றார்கள் நான் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன் மலையக மக்கள் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் எந்த ஒரு தீர்மானத்தையும் சரியாக எடுக்கக் கூடியவர்கள் வாக்களிப்பதில் தங்களுடைய சின்னத்தை மிகவும் அழகாக தெரிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றார்கள் இன்று மலையகத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது எனவே எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் தன் மானத்தைக் காக்க அளிக்கின்ற ஒரு சமூகம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

எந்தவொரு வெற்றியும் மக்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது மகாத்மா காந்தி தன்னுடைய போராட்டத்தின்போது மக்கள் எடுத்த தீர்மானத்தின் பின்னால் அவர் சென்ற காரணத்தினால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது நாங்களும் மக்கள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு பின்னால் சென்று அந்த தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதுதான் எங்களுடைய பொறுப்பாகும் ஒரு நாளும் நாங்கள் அல்லது தலைவர்கள் மக்களை பின்னால் வருமாறு அழைக்காமல் மக்கள் எடுக்கின்ற நல்ல தீர்மானங்களுக்கு பின்னால் தலைவர்கள் சென்றால் நிச்சயமாக அந்த தீர்மானம் வெற்றி அடையும் அதனை கடந்த காலத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக எங்களுடைய தேர்தல்களில் பார்த்திருக்கின்றோம்.

மலையக மக்கள் தங்களுடைய சலுகைகளுக்காக அல்லது ஒரு சில அற்ப விடயங்களுக்காக ஒரு பொழுதும் தங்களுடைய வாக்குகளை வழங்க மாட்டார்கள் அவர்கள் தாங்கள் நினைக்கின்ற அல்லது தீர்மானிக்கின்ற தலைவனுக்கு வாக்களிப்பதில் அவர்கள் என்றும் பின் நிற்க மாட்டார்கள்.

மலையக மக்களுக்கு நன்றாகவே தெரியும் யார் அவர்களுக்காக அவர்களை முன்னேற்றுவதற்காக அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுவாக இன்று மலையகத்தில் பலர் ஓரங்கட்டப்பட்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் கடந்த காலங்களில் அவர்கள் அரசியலில் இருந்த பொழுது இந்த மக்களின் நன்மைக்காக அல்லது இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக எதனையும் செய்யவில்லை என்பதை எங்களுடைய மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

எல்லோரும் கூறுவது போல மலையக மக்களுடைய பிரச்சினை தனியே சம்பள பிரச்சனைக்கு மாத்திரம் வரையறுத்து விட கூடாது அது தவிர இன்னும் எத்தனையோ தேவைகளும் அபிவிருத்திகளும் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது அந்த அனைத்து விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஒரு சமூகத்தின் விடிவு என்பது முழுமையாக கல்வியிலே தங்கியிருக்கின்றது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன் ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கிருந்து அரசியலுக்கு வந்து இன்று ஒரு அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் எங்களுடைய மக்கள் என்பதை நான் என்றும் மறந்துவிட மாட்டேன்.

எனவே இந்த மக்கள் என்னை தெரிவு செய்திருக்கின்றார்கள் நான் கடைசி வரை இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணித்து சேவை செய்வதே எனது தலையாய கடமையாக கொண்டு இருக்கின்றேன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுடைய மக்களுக்காக நான் எந்த ஒரு விட்டுக்கொடுப்பு பையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் நாங்கள் அரசியலில் வந்து பணம் சம்பாதித்தவர்கள் அல்ல மாறாக மக்களுடைய சேவையை முழுமையாக கருத்தில் கொண்டு செயற்படுகின்ற ஒரு அரசியல்வாதி என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் மலையக மக்கள் அவர்களுக்கு யார் என்ன செய்து இருக்கின்றார்கள் என்பதை நன்றாக ஆராய்ந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை தெரிவு செய்ய வேண்டும் இன்று பல்வேறு இடங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது எனவே மக்களுக்கு சேவை செய்யாத எவராக இருந்தாலும் அவர் ஓரம் கட்டப்படும் வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு கூட எனவே எதிர்வரும் தேர்தல் எங்களுடைய சமூகத்தை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கின்ற ஒரு தேர்தல் அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அடையாளத்தை அல்லது எங்களுடைய குரலை பாராளுமன்றத்தில் ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தின் சார்பாக அதிகமான அங்கத்தினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் அது எந்த கட்சி என்பதை விட எங்களுடைய சமூகத்தின் குரலாக அது பாராளுமன்றத்தில்ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் அதனை நிச்சயமாக இந்த மக்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply