தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்

Spread the love

தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் வீட்டு கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply