சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி

Spread the love

சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நான்கு பொலிசாரின் பூதவுடல்களுக்கு பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன (28) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர்களின் குடும்பங்களுக்கு பொலிஸ்மா அதிபரினால் பணத்தொகையும் ,நன்கொடையும்

வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய பதவி உயர்வு

அடிப்படையில் தற்போது உள்ள தரத்தில் இருந்து அடுத்த தரத்துக்கு பதவி உயர்வும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த பொலிசாரின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர், இலங்கை பொலிஸ் சார்பாக அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

திருக்கோவில பொலிஸ் நிலைய சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியான,,கே. எல். எம் அப்துல் காதர்,

பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஏ. நவிநாத் மற்றும் டி. பி. கே. பி. குணசேகர மற்றும் பொலிஸ்

கான்ஸ்டபிள் சாரதி டி. எம். டி. எச். புஷ்பகுமார ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply