பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!

Spread the love

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!

இன்று எந்தன் பிறந்த நாள்
இன்று எந்தன் பிறந்த நாள்
இல்லம் இன்று மகிழும்
இன்று எந்தன் பிறந்த நாள்

மூத்தவனாய் வந்துதித்த – என்
முதல்வனுக்கு பிறந்த நாள்
வாழ்க்கையிலே தந்தையாக
வந்துதித்தான் பிறந்த நாள்

ஆண்டு இன்று பதினொன்றில்
ஆளும் இந்த பிறந்த நாள்
அகவையில மூப்பாகி – அகிலம்
ஆழ வந்த பெருநாள்

நெஞ்சுக்குள்ளே நீரலையாய்
நீந்தி வரும் பெரும் நாள்
மண்ணுக்குள்ளே வீரம் எழ
மன்றில் வந்தான் பெரும் நாள்

உந்தன் புகழ் பாடிவிட
உருளும் ஆண்டு போதவில்லை
உலகை ஆண்டு ஏறிவிட
உன்னை வாழ்த்த அச்சமில்லை

ஆண்டு தோறும் அகவையிலே
அன்பை ஏற்று ஆண்டிடுவாய்
ஆளும் காலம் ஆயூள் நூறு
அறத்தை நாட்டி வாழ்ந்திடுவாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-12-2021

Leave a Reply