பிணங்களால் மிதக்கும் தேசம்

Spread the love

பிணங்களால் மிதக்கும் தேசம்

கந்தக துகளிருந்து கதறுதடா பிஞ்சு
கை இழந்து பாவமடா நோகுதடா குஞ்சு …
என் செய்தார் என்றிவரை கொல்லுதடா நஞ்சு …?
எவன் உண்ண பிள்ளை கறி தேடுதடா சொல்லு …?

வாலாட்ட மறுத்ததாலே வாடுதடா நாடு
வல்லராசம் அமெரிக்கா புரிந்த செயல் கேடு …
வெள்ளையனாம் மாளிகைக்கு வெடிகுண்டை போடு -போர்
வெறியடங்கி நிமிருமடா உலகில் பல நாடு ….

தெருவெல்லாம் மிதக்குதடா பிள்ளைகளின் கூடு
தேம்பி தேம்பி அழுகுதடா உலகில் பலநாடு …
நெஞ்சை வெட்டும் கொடுமைகளை நிறுத்துவது யாரு ..?
நேசமுடன் உயிர் பலியை தடுத்திடுமோ போரு ..?

மா நிறத்து புழுதிக்குள்ளே மழலைகளை பார்த்தேன்
மாண்ட உயிர் மீண்டிடுமா மக ராசர்களே கூறும் ..?
பிள்ளைகளை கொல்வது தான் பிரியமுள்ள போரோ…?
பிரளையத்தை கிண்டியவர் நெஞ்சமதன் வேரோ…?

பிணங்களால் மிதக்கும் தேசம்

கை இழந்து ,கால் இழந்து கதறுதடா குஞ்சு
கண்ணிரண்டில் நீர் வழிய கதறுதடா நெஞ்சு ….
எவன் செயத வேலையடா இந்த இழி போரு..?
ஏறி இன்று போடுங்கடா அவன் உடலை துண்டு …

மானமுள்ள உலகத்தாரே மன்றில் ஏறி வாங்க
மழலைகளை காத்திட தான் ஒன்றாகி போங்க …
சிரிப்பிழந்த சிரியாவை சிறை மீட்க வாரீர்
சிறகடிச்சு பறக்கும் வெண்புறாவை தாரீர் …!

  • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் – 04-03-2018

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply