பகை வெல்ல வழி என்ன …?
வென்றவர் உலகில் நூறு
வெளி வந்தவர் உலகில் நூறு
உலகாண்டவர் கோடியில் நூறு
உதை வாங்கியர் கோடியில் நூறு ….
சிந்தை செய்தார் நூறு -அட
சிகரம் தொட்டார் நூறு ….
விந்தை செய்தார் நூறு
வீழ்ந்து மடிந்தார் நூறு ….
எந்தையார் நாடு ஏனோ ..?
எமன் காலில் வீழ்ந்த கேடு ..?
முந்தையர் வீழ்ந்த செயலும் -உன்
மூளையில் ஏறல் பாரு ….
முப்படை செய்தும் என்ன
முடிவில் ஏதும் இல்ல ….
இப்பகை கொன்று வெல்ல
இன்று வழி என்ன சொல்ல ..?
- வன்னி மைந்தன்
ஆக்கம் -06-12-2019