நீ வந்தால் போதும் …!
சிங்கராஜா வனமா நீ
சிக்கெடுக்க வரவா நான் ..?
பாய் விரிக்கும் புல்வெளியை
பாவை சுருட்டி தரவா …?
ஆளை உண்ணும் சிறுத்தை கூட
அக்கம் ,பக்கம் இருக்குது ….
அதை அறியா வந்து இங்க
ஆடும் மயில் சிக்கி தவிக்குது ….
தோகை இல்லா பெண் மயிலே
தோகை நானும் தந்திடவா …?
ஆவி . உடல் அத்தனையும்
அடியே உன்னில் வைத்திடவா ..?
என்ன மானே கலக்கம்
ஏனிந்த தயக்கம் …?
ஊரை தூக்கி தூர வீசு
உறவே என்னில் ஏறி மூசு ….
வந்தவர் ஆயிரம் வழியில் சொல்வார்
வலிகளை அள்ளியே மேனியில் எறிவார் …
நின்று கேட்டால் நீயும் அழிவாய்
நிலை குலைந்து உயிர் விடுவாய் ….
ஊர் பேச்சு வீண் பேச்சு
உள்ளம் தட்டு வரும் வீச்சு ….
உன்னை நீயே நம்பு
உயிர் தரும் தென்பு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -28/03/2019
( சிங்கராஜா வனம் இலங்கையின் மிக பெரும் முதல் காடு )