நீ தமிழனா

Spread the love

நீ தமிழனா

தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
வழியில் பெரும் சதி செய்தார்

விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
வீரம் உலகில் சொன்னார்
வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
வேளையில் தமிழர் கொதித்தார்

போரிலே வென்றிட வேண்டும்
பெரும் பலம் ஆளணி என்றார்
வரும் பகை வழியில் எய்தே
வாழ்வோம் நலமுடன் என்றார்

நீ தமிழனா

செய் நெறி வாய்மை கேளார்
செந்தணலாகி கொதித்தார்
வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
வாளை சுருட்டி கொண்டார்

எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
ஏறி பறையடி அங்கே
வந்தனர் பகைவர் வாயில் -கை
வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?

முன் தினம் வீரம் எங்கே
முரசொலி தமிழ் எங்கே
விண் புகழ் ஏறிய வீரம்
வீரரை கொய்தாய் நன்றோ ..?

எம் தமிழ் மானம் இன்றோ
எமனவன் காலில் நன்றோ
இது தான் தமிழ் நில பண்போ
ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 06-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply