நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

Spread the love
நியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா

விஜய்யுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியுடன் நயன்தாரா ‘தர்பார்’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். அங்கு அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தவரும், தற்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்திருக்கிறார்கள்.

போனிகபூருடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா

நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூர் தங்கி வருகிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Leave a Reply