நினைவில் வைத்து கொள் …!
தீயும் ஒருநாள் எரியும் எரியும்
தீங்கு அதில் பொரியும் பொரியும்
வாழ்வு தந்தார் வாசல் வரும்
வாழ் வழித்தார் வீதி வரும்
காலமதில் காட்சி விழும்
கண்கள் அது பூத்து விழும்
வாய் இருந்தால் சிரித்து விடு
வார்த்தை இரண்டை ஒடித்து விடு
வேர் மறைத்து நீர் நடந்தால் – ஆணி
வேர் பிடித்து முளை எழும்
ஆணவத்தை தலையில் வைத்தால்
ஆயூள் விரைவினிலே வாசல் வரும்
கண்ணிருந்தும் பார்வையிலா
காலமதில் முடங்கி இருப்பாய்
கனி மரத்து தோப்பறிந்து
கால மெல்லாம் அழுதிருப்பாய்
ஏதுமில்லை என்ர றிந்து
எவரையும் நீ ஏறிந்திடாதே
ஏற்றமது முளைத்து விட்டால்
ஏணி அவர் மறந்திடாதே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-04-2022