தேவிபுரம் பகுதியில் வீடில்லா தவித்தவருக்கு வீடுகட்டி வழங்கிய -பாலன் அறக்கட்டளை photo

Spread the love
தேவிபுரம் பகுதியில் வீடில்லா தவித்தவருக்கு வீடுகட்டி வழங்கிய -பாலன் அறக்கட்டளை photo

நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்தின் நிதிப் பங்களிப்பில் 20 12 2019 அன்று லோகேஸ்வரன் பாரதி வீதி தேவிபுரம் பகுதி

என்பவருடைய இருப்பு நிரந்தரமாக்கப் பட்டதை யிட்டு மனம் நிறை அடைகின்றோம் .


அண்மையில் இவருடைய மூத்த மகன் வயது 5 சுகயீனம் காரணமாக தவறிவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய வறுமையே


மற்றைய இரண்டு குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக வீடு தேவைப்பட்டதை பாலன் அறக்கட்டளையினர் அறிந்திருந்தனர்.


அவர்களுடைய உண்மை நிலையினை நியூசிலாந்து தமிழ்ச் சங்கத்திற்கு தெரிவித்திருந்த போது அவர்கள் அதற்கு உரிய நீதியை தருவதாக மனப்பூர்வமாகச் சம்மதித்தனர்.


அவர்கள் வீடு கட்டுவதற்குரிய ரூபா 30 000 பெறுமதியான பொருட்களை மட்டுமே வழங்கியிருந்தோம்.
து .லோகேஸ்வரன் என்பவர் (மேசன்) வீடு கட்டுபவர்

என்பதால் அவர் தன்னுடைய வீட்டை விரைவாகவும் ஆர்வத்துடனும் கட்டி முடித்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்


வீடு கையளிக்கும் நிகழ்வில் தேவிபுரம் பகுதிக்குரிய கிராமசேவகர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சனசமூக நிலைய தலைவர் செயலாளர் பாலன்

அறக்கட்டளை தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


கொடுமையிலும் கொடுமை வறுமை
வறுமையை ஒழிக்க தாயகம் நோக்கி செயல்படுங்கள் அன்பான உறவுகளே.

Leave a Reply