திரு நங்கையாக நடிக்க ஆசை – ரஜினி

Spread the love
திரு நங்கையாக நடிக்க ஆசை – ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட

இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, தனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது என்று கூறினார்.

தர்பார் படக்குழுவினருடன் ரஜினி

தாங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என கேட்டதற்கு, தனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை என கூறிய ரஜினி,

தர்பார் படத்தில் இடம்பெறும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம், மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply