தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை – டாப்சி

Spread the love
தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை – டாப்சி

ஆடுகளம் படத்தில் நடித்த டாப்சி அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்பு அமையாத நிலையில் இந்தி படங்களில் நடிக்க சென்றார். கோலிவுட்டை விட பாலிவுட் அவருக்கு கை கொடுத்தது.

இதுவரை 15 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இடையில் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை. தமிழ் படத்துக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்று அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.

அப்போது டாப்சி கூறியதாவது, ‘தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ் திரையுலகம்தான் கேமரா, நடிப்பு போன்ற எல்லா அடிப்படையையும் கற்றுத்தந்தது.

டாப்சி

இப்போது தமிழ் பேசவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். மார்க்கெட் உள்ள ஒரு தென்னிந்திய திரையுலகுக்கு நான் முழுக்கு போட நினைத்தால் அது முட்டாள்தனம் ஆகிவிடும். பாலிவுட்டிற்கு வருவதற்காக தமிழ் படங்களை நான் ஒரு ஏணியாக பயன்படுத்த வில்லை.

பாலிவுட்டை பொறுத்தமட்டில் இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் இன்னும் ஒரு புதுநடிகையை போலத்தான் என்னை டிரீட் செய்கிறார்கள். என்னை பற்றி தென்னிந்திய திரையுலகில் அதிர்ஷ்டம் இல்லா தவர் என்று கூறுகிறார்கள். நான் நடித்த 4 படங்கள் சரியாக போகாததால் அப்படி கூற ஆரம்பித்தார்கள். மரத்தை சுற்றி நான்கு பாட்டு பாடுவதும் மேற்கொண்டு சில சீன்களில் மட்டுமே நடிப்பதுபோன்று எனது கதாபாத்திரங்கள் இருந்தது. திரும்ப திரும்ப ஒரே பாணியிலான படங்கள் உருவானதால் அவை தொடர் தோல்வியானது’ என்றார்.

Leave a Reply