தமிழ்நாட்டுல மேடை ஏறி பேசவே பயமா இருக்கு – மம்மூட்டி

Spread the love
தமிழ்நாட்டுல மேடை ஏறி பேசவே பயமா இருக்கு – மம்மூட்டி

மம்மூட்டி, இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமங்கம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பேசியதாவது: தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் சரியாக தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்புதப்பாக தான் பேசுவேன். வரலாற்று படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோ‌ஷம்தான்.

100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபார் தான் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன. இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய வி‌ஷயம்.

மம்மூட்டி

மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியை தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்த காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்த படம் சாதாரணமான ஒரு பழிவாங்கும் கதை கிடையாது. இந்த படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குநர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட ‘பேரன்பு’ எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோ‌ஷமாகவே பண்ணிக் கொடுத்தார்’.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply