சிந்துவை மணந்தார் சதீஷ்

Spread the love

நடிகர் -சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ்.

இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.

சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட

சிந்துவை மணந்தார் சதீஷ்

திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் சதீஷ் – சிந்து

இருவருக்கும் இன்று திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட

அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.

சதீஷ் – சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி,

சிந்துவை மணந்தார் சதீஷ் ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா,

அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்

காமடி நாயகனாக விளங்கி வரும் சதீஸ் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .

இடையில் திரையில் காணாமல் போன இவர் இப்பொழுது திருமணம் முடிந்ததன் பின்னர் நிரந்தரமாக காணாமல் போக கூடும் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர் .

கிடைக்கும் வாய்ப்புக்களை பயனப்டுத்தி முன்னேறி சென்ற நடிகர்கள் மத்தியில் இவர் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது .

நடிகர் சூரி பிரபல உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார் ,அங்கு இவரை காணாவே ரசிகர் பட்டாளம் குவிகிறது

புகழோடு இருக்கும் பொழுதே இவர்கள் மக்களை சென்றடைவதுடன் ,தமது நிறைந்த நிரந்தர வருமானத்தையும் ,தொழிலையும் புத்தி சாலித்தனமாக உருவாக்காகி விடுகின்றனர்

இவர்களின் வரிசையில் சதீஸ் இடம் பிடிப்பாரா காத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply