சர்ச்சை பேச்சு எதிரொலி…. கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்ரஜினி நடித்த, தர்பார் பட இசை விழா, சென்னையில் நடந்தது. இதில், பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘சிறு
வயதில், ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தபோது, கமல் பட போஸ்டர் மீது சாணியடித்தேன்’ என்றார்.
இதற்கு, கமல் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தன் பேச்சுக்கு, லாரன்ஸ் விளக்கம் அளித்தபோதிலும்,
தொடர்ந்து அவர் பேசிய பேச்சுகள், சமூக வலைதளத்தில் வலம் வந்தன.
ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், நடிகர் கமலை, அவரது வீட்டில், நேற்று லாரன்ஸ் சந்தித்து பேசினார். லாரன்ஸ், ‘டுவிட்டரில்’
கூறியுள்ளதாவது: கமல் குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. என் பேச்சு,
சர்ச்சை பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகிறது. இது குறித்து, நான் ஏற்கனவே விளக்கமளித்தேன். தற்போது, கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன்.
என் விளக்கத்தை ஏற்ற கமல், என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.