இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

Spread the love

இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா

விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் – சமந்தா
சமந்தா


நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன.

இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார்.

இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

சமந்தா

இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள்.

விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால்

நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள்

என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது

வலிமை எனக்கு தெரிந்துள்ளது. நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும்” என்றார்

Author: நலன் விரும்பி

Leave a Reply