இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

Spread the love

இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

மிகவும் அமைதியான முறையில் இந்த மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிபடுத்தியிருந்தனர் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும் அன்று எமது நாட்டின் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

அந்த இளைஞர், யுவதிகள் சிறந்த ஜனநாயக பண்புடன் அவர்களதும் இந்த நாட்டு மக்களினதும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க துப்பாக்கியில்லாமல் குண்டு இல்லாமல், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மிகவும் கௌரவமான முறையில் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.

அரசாங்கம், அரசாங்கத்தின் பிரதானிகள் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது, தம்மிடம் கேட்காமல் தம்மை இணைத்துக் கொள்ளாமல் எவரினதும் ஆலோசனையைப் பெறாமல் தவறான

தீர்மானத்தை எடுத்து அதனைச் செயற்படுத்தும் போது, விசேடமாக அத்தீர்மானத்தால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

எனவே, இந்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உயரிய நிலையை எடுத்துக்காட்டினர். தமது எதிர்ப்பை ஆங்காங்கே சென்று, பைத்தியகாரத்தனமாகக் காட்டாமல்

மிகவும் அமைதியாக பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். இதையே ஜனநாயகம் என கூறுகிறோம் என்று குறிப்பிட்டார்.

அந்த மாணவர்கள் யார் என தனக்கு தெரியாது. ஆனால் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனது

கௌரவத்தை செலுத்துவதாகவும் யார் என்ன சொன்னாலும் அன்று அந்த மாணவர்கள் செயற்பட்ட விதம், 100 சதவீதம் சரியென்றார்.

இந்த மாணவர்களைப் போன்று, நாட்டை நேசிக்கும் ஏனைய இளைஞர்கள், முதியவர்கள் எந்த அரசாங்கத்தில் இவ்வாறு தவறு ஏற்படும் போதும், மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுங்கள் என்றார்

    Leave a Reply