
சதி செய்த பெரும் துயரம்
கந்தக துகள்கள் காட்சி இன்று
கண்ணீர் தருகிறதே
கதறல் ஓலம் வானை உடைக்க
கண்ணீர் கொதிக்கிறதே
உடைந்து வீழ்ந்த உக்ரைன் எண்ணி
உள்ளம் உருகிறதே
உயர்ந்த ஆட்சி சிகரம் எண்ணி
உதடு உமிழ்கிறதே
ஒன்றாய் வாழ்ந்த கூடுகள் இன்று
ஒற்றர் ஆனதென்ன
ஒருமை கூட பகைமை எகிற
ஒரு நாடு சிதைவதென்ன
எதிரி புரிந்த சதிகள் எண்ணி
ஏன் நீ கொதிக்கலையோ
ஏற்றம் கொண்ட உம்மை அழித்தான்
ஏன் அதை புரியலையோ
உலகை ஆண்ட சோவியத் ரஷ்யா
உடைந்த துயரம் என்ன
உள்ளே நுழைந்து உம்மை உதைத்தான்
உணர மறந்ததென்ன
விதிகள் வைத்து சதிகள் செய்தான்
வினை இன்று புரிகிறதா
வீழ்ந்து உடையும் உக்ரைன் மண்ணில்
விடுதலை முளைத்திடுமோ
அழுது புலம்பும் ஆயிரம் நெஞ்சுக்கு
ஆறுதல் கிடைத்திடுமோ
அகால மரணம் அதனை தடுக்க
அகிலம் ஏது செய்திடுமோ
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2023