கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு

Spread the love

கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 746 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான இந்தத்

தொற்றாளர்களுடன் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின்

எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.Covid TOTALஇதேவேளை,

கொவிட் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த மேலும் 316 பேர் முழுமையாகக்

குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, முழுமையாகக் குணமடைந்தவர்களின்

எண்ணிக்கை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 326 ஆகும். மேலும் 21 கொவிட் மரணங்களை சுகாதார

சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆகும்.

இதுவரை உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 கோடி

61 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 70 ஆயிரத்திற்கும்

அதிகமாகும். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து

பத்தாயிரத்திற்கும் அதிகமாகும். இவர்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, 13 லட்சத்து 43 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply