கிழக்கொன்று வெளிக்கிறது …..!

Spread the love

கிழக்கொன்று வெளிக்கிறது …..!

யான் அழுது உழன்றிடவோ ..?
யாத்தலும் நின்றிடவோ ..?
ஏதுமிலார் என்றிடவோ ..?
ஏற்று யான் சென்றிடவோ ..?

ஊருமிலார் பேருமிலார்
ஊர் ஏறி வந்தின்று …
யான் அழுகை கழித்திடவோ ..?
யாசகம் செய்து பிழைத்திடவோ …?

வேர் அறுந்தான் என்றென்னை
வேறாக்கி வைத்திட்டார் ….
தீங்குடையும் காலம் ஒன்று
தீ கொண்டு வருகுதின்று …..

பாங்குகள் கண்டு யான்
பரவசம் கொண்டெழுந்தேன் ….
ஆக்கினைகள் உடையும் – நல்
ஆகாயம் கண்டு விட்டேன் ….

இக்காலம் கண்டென்னை
இழி கொண்டார் வாய்கள் எல்லாம் …
பொற்கால முன்றலில்
பொடியாகும் நிலை செய்தார் …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )

ஆக்கம் -22/05/2019

      Leave a Reply