கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
Spread the love

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.

அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.

போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.