கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும் இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்

Spread the love

கால்களை இழந்து சொந்த காலில் நிற்க ஏங்கும்
இளைஞனுக்கு நேசகரம் நீட்டுவோம்,

நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட் வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் (கயிர்கட்டி தோட்டம்) வசித்து வருபவரே கே.உதயதீபன்

(வயது 26) இவருக்கு 12 வருடங்களுக்கு முன் தரம் 07 இல் இறம்பொட இந்து கல்லூரியில் கல்வி கற்றுக் கொன்டிருந்த காலப்பகுதியில் தனது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டது. கால்களை இழந்து

குனப்படுத்துவதற்கு பெற்றோர்கள் பல முயற்சிகளை எடுத்த பொழுதும் இது வரைக்கும் வெற்றியளிக்காத நிலையில் இந்த இளைஞன் தற்போதும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றார்.

மிகவும் துடிப்பும் நற்குணமும் மன தைரியமும் தன் நம்பிக்கையும் கொண்ட இந்த இளைஞன் சொந்த காலில் நிற்பதற்கு மலையக இளைஞர்களிடம் உதவிகரம் நீட்டுகின்றார்.

கால்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சுருசுருப்பாக எங்களுடன் கதைத்த உதயதீபனிடன் கருத்துகள் கேட்ட பொழுது.

எனது அம்மா எஸ்.சுந்தரம்பாள் (வயது 53) எனது அப்பா எம்.கனகராஜ் (வயது 52) ஆகிய இருவரும் எனக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்கள் அவர்களுக்கும் வயது போய்கின்றது.

இருவரும் தோட்டத்தில் வேலை செய்து விட்டு ஓய்வில் உள்ளார்கள். தற்போது வருமானத்திற்காக மரக்கரி தோட்டங்களில் அன்றாடம் தொழில் செய்கின்றார்கள் அவர்களையும் அரவனைத்து பார்த்துக் கொள்ள வேண்டிய நான் இவ்வாறு இருக்கின்றேன்.

எனக்கு கால்களில் தான் பிரச்சனை என் மனதில் அல்ல என் மனம் தற்போதும் துடிப்புள்ள இளைஞனாகவே இருக்கின்றது.

எனக்கு சொந்தமாக சுயதொழில் செய்ய அல்லது வியாபாரம் செய்ய யாரும் உதவி செய்வார்கள் ஆனால் என்னால் எனது அம்மா அப்பாவை பார்க்க முடியும்.

எனது அம்மா அப்பா இருவரும் எனக்காக பிச்சை கூட எடுத்துள்ளார்கள் இவர்களுக்காக ஒரு மகன் என்ற ரீதியில் சேவை செய்ய வேண்டும்.

எனக்கு வீட்டில் வசதிகள் இல்லை சக்கர நாற்காலியும் முறையான மலசலகூட வசதியும் இல்லை.

எனது காலை சுகப்படுத்த ஆரம்பத்தில் பல நல்லுள்ளங்கள் உதவிகள் செய்தன அதனை நான் மறக்கவில்லை. தற்போது எனது காலில் உணர்வுகள் இருக்கின்றன.

இதனை சரி செய்ய போதிய பணம் எனது அம்மா அப்பாவிடம் இல்லை. முறையான மருத்துவ வசதிகள் கிடைக்குமானால் நான் எனது சொந்த காலில் எழும்பி நிற்க முடியும்.

என்னை கவனிக்க அம்மா அப்பாவை தவிர யாரும் இல்லாதாதால் என் நிலை இவ்வாறு ஆகிவிட்டது.


இன் நிலையில் மலையகத்தில் உள்ள இளைஞர்களிடம் நான் சொந்த காலில் நிற்க உதவுமாறு கேட்கின்றேன் எப்படியும் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று கூறினார்.

மலையக இளைஞர்களே இவர் சுயமாக கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்ய விரும்புகின்றார்.

இதற்கு முறையான தற்காலிக கடை அல்லது இவர் இருக்கும் பிரதேசத்தில் விற்பனை செய்ய கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும் சுயதொழில் ஒன்றையும் செய்ய விரும்புகின்றார்.

விரும்பியவர்கள் முன் வாருங்கள் இவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய

கால்களை இழந்து
கால்களை இழந்து

Leave a Reply