காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்

காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
Spread the love

காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது.

கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும் இந்த பகுதிக்கு சென்று இவற்றை பார்வையிட்டதுடன் போராட்டக்காரர்களுக்கு இது குறித்து அறிவித்தனர்.

அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Author: நலன் விரும்பி

Leave a Reply