காருக்குள் சிசுவை பூட்டி கொன்று தந்தை தற்கொலை
அமெரிக்கா ; அமெரிக்கா வேரிஜின பகுதியில் தந்தை ஒருவர் தனது காருக்குள் 18 மாத சிசுவை
பூட்டிவிட்டு மறந்து சென்றுள்ளார் .
சிசு கொலை
மூன்று மணி நேரமாக காருக்குள் சிசு கைவிட பட்ட நிலையில் காருக்குள் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணாமாக மூச்சு திணறி பலியாகியுள்ளது .
சிசுவை காணவில்லை என தந்தை காருக்குள் வந்து பார்த்த பொழுது சிசு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
தந்தை தற்கொலை
தந்தையாகிய தனது தவறால் சிசு இறந்ததை சகித்து கொள்ள முடியாத அதிர்ச்சியினால் அருகில் உள்ள காட்டுப்புற பகுதிக்குள் சென்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
சிசுவின் மரண துயரில் தந்தை மேற்கொண்ட இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மறதியினால் நடந்த மரணங்கள்
காருக்குள் இவ்வாறு கைவிட பட்ட நிலையில் இதுவரை
எட்டு சிறார்கள் இந்த வருடத்தில் மட்டும் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது