காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!

Spread the love

காத்திரு உன் கடன் தீர்ப்பேன் ..!

உள்நாட்டு போர் வெடிக்க
ஊந்துகணை வாசல் விழ
கதறி வாய் குழற
கால் பிடித்து நாமோட

சிங்களத்து வாசலிலே
சிறை பட்டு நான்கிடக்க
ஓடி வந்தென்னை
ஒத்திக்கு எடுத்தவரே

வேரூன்றி யான் நிமிர
வேண்டுதல் செய்தவரே
உன்செயல் கடன்தீர்க்க
உள்ளத்தால் முடியலையே

ஆண்டு பல கடந்திருச்சு
ஆனாலும் இயலையே
மறந்துவிட்டேன் என்றே
மனதில் நினைத்திருப்பாய்

ஆவி பிரியு முன்னே
அக்கடனை யான் முடிப்பேன்
உன் செயல் யான் மறப்பின்
உலகம் அழிந்து விடும்

விரைவில் கை பேசி
விடயம் பகிரும்
அன்று வியப்பாய்
அழுதே களைப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 23-12-2021

Leave a Reply