கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை
கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு
அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள்.
கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து
உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும்
இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை
அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில்
உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும்.
எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை
தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.
இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும்.
அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளறுகளினால் சிரமப்படுவார்கள்.
இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது.
எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்
. அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால்
பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம்.
அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.