கண்ணீர் அஞ்சலி ….!
ஓடி வரும் காற்றடித்து
ஒடிந்து விழும் இலைபோல
மனமுடைந்து போனதையா – விழி
மாரி மழை ஆனதையா ….
கால் ஊன்றி நடைபயின்ற
காலமதில் அருகிருந்து …
நேசம் தந்து நின்றவரே
நெஞ்சமது வெம்புதையா ….
கட்டி முத்தம் தந்து அன்று
கதைகள் பல சொல்லி நன்று
வாங்கி தந்த மிட்டாய்கள்
வாயிலின்றும் சுவைக்குதையா ….
கைபேசி மணியடிக்க
கலகலத்து பேசி நின்றாய்
இன்றும் உந்தன் சிரிப்பொலிகள்
இரு செவியில் ஒலிக்குதையா ….
பேரன்பு கொண்டவரே
பெரும் துயரை தந்து இன்று
எம்மை விட்டு போனதென்ன
ஏங்கவைத்து சென்றதென்ன …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/08/2019( 00447536707793)
18-08-2019 அன்று தாத்தாவின் மரண துயரில் …..அவர் பாதம் ..என் கண்ணீர் சமர்ப்பணம்