ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா ஒன்று கூடும் எதிரிகள்

Spread the love

ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா ஒன்று கூடும் எதிரிகள்

உக்கிரேன் மீது ரஷ்யா இராணுவம் போரை நடத்திய வண்ணம் உள்ளது .அதிவேகமாக முன்னேறிய வண்ணம் உள்ள ரஷ்யா இராணுவம்

ஐரோப்பாவுக்குள் நுழையலாம் என்கின்ற பீதியில் ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது இராணுவத்தை குவித்து வருகிறது .

போலந்து ,பிரித்தானியா ,ரோமானியா, ஜேர்மனி என தனது இராணுவத்தை அமெரிக்கா குவித்த வண்ணம் உள்ளது .

ஐரோப்பாவில் அமெரிக்கா இராணுவம்

நேட்டோ நாடுகளுக்கு தீனி போடுவது போன்று அமெரிக்கா முன்னெடுத்து நகரும் இந்த இராணுவ குவிப்பு வலிந்து தாக்குதல் மேற்கொள்ள முனையும் நடவடிக்கையின் முன்னோட்டமாக பார்க் படுகிறது .

உக்கிரேனில் ரஷ்யா இராணுவம் தோற்று விட்டது என பரப்புரை செய்யும் அமெரிக்கா ,நேட்டோ நாடுகள் இப்பொழுது அவசர அவசரமாக ஐரோப்பா எங்கும் அமெரிக்கா இராணுவத்தை குவிக்க காரணம் என்ன ..?

ரஷ்யா இராணுவத்தை எதிகொள்ள இந்த எதிரிகள் ஒன்று கூடுவதன் நோக்கம் தான் என்ன என்கின்ற யதார்த்த கேள்விகளுக்கு ரஷ்யா எதிரி நாடுகள் தெளிவான பதிலை கூறிடா மறந்து கடந்து செல்கின்றனர்.

உக்கிரேனில் இனப்படுகொலை

உக்கிரேனில் ரஷ்யா இராணுவம் இனப் படுகொலை நடத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஊளையிட்ட வண்ணம் உள்ளன .

ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா ஒன்று கூடும் எதிரிகள்
ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா ஒன்று கூடும் எதிரிகள்

மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் போரினை தொடுத்து,

அரசுகளை கவிழ்த்து பல்லாயிரம் மக்களை கொன்று குவித்த அமெரிக்கா அந்த மண்ணில் புரிந்தது என்ன என்கின்ற கேள்வி எழுகிறது.

தாம் புரிந்தது போர் ரஷ்யா தொடுத்துள்ளது இனப் படுகொலையா..? என்ற கேள்வி எழத்தானே செய்கிறது ,அந்த கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை .

ஐரோப்பாவில் என்றுமில்லாதவாறு திடீரென அமெரிக்கா இராணுவத்தை குவித்து அதமது ஆயுதங்களை அவசர அவசரமாக விற்கும் அமெரிக்கா தனது நாட்டின் பொருளாதாரத்தை வேகமாக கட்டி எழுப்பி வருகிறது.

கொரனோவில் இழந்த பொருளாதார இழப்புக்களை நிவர்த்தி செய்திட உக்கிரேன் போர்க்களத்தை தனக்கு சதமகமாக பயன்படுத்தி தனது சுரண்டலை வெற்றிகரமாக நடத்திவருகிறது.

அமெரிக்கா தலைமையில் ஒன்று கூடிய எதிரிகள் எதிரி நாடாக விளங்கும் ரசியா சீனாவை எதிர்த்து போரிட்டு அந்த போர் நீட்சியில் வெல்ல முடியுமா என்ற பிரதான கேள்வி எழுந்து நிற்கிறது .

  • வன்னி மைந்தன் –

    Author: நலன் விரும்பி

    Leave a Reply